கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சினிமா தொடங்கிய காலத்தில் நாயகனும், நாயகியும் வசனங்களால் பேசிக் கொள்வதை விட பாடல்களால் பேசிக்கொள்வதுதான் அதிகம். நாடகத்தில் இருந்த இந்த வழக்கம் சினிமாவிலும் தொடர்ந்தது. அந்த வகையில் 50 பாடல்களுடன் வெளியான படம் 'திரௌபதி வஸ்திராபகரணம்' (திரவுபதியின் ஆடை அலங்காரம்). மகாபாரதத்தின் மிக முக்கிய பகுதியான பாஞ்சலியை துச்சாதனன் துகிலுறியும் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதனையே முழு நேர படமாக எடுத்திருந்தார்கள். 16 பாகங்களை கொண்ட படமாக கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் படமாக வெளிவந்தது.
தமிழ் சினிமாவின் முதல் நாயகியான டி.பி.ராஜலட்சுமி திரௌபதியாக நடித்தார். அன்றைய புகழ்பெற்ற பாடகர் வி.ஏ.செல்லப்பா துரியோதனனாக நடித்தார். செருகளத்தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். மற்றும் பி.எஸ்.சிவபாக்யம், வாசுதேவ பிள்ளை, பந்துலு அய்யர் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் ஏஞ்சல் பிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. முழு படமும் கொல்கத்தா பயனியர் பிலிம் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு வெளியானது.