திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால் | மம்முட்டியின் களம்காவல் படம் சர்வதேச வசூலில் புதிய சாதனை | கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம் | மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல் செய்தி | மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போகும் கருப்பு படம்! | ‛டாக்ஸிக்' படத்தில் நாடியாவாக கியாரா அத்வானி! | நானிக்கு ஜோடியாகும் கயாடு லோகர்! | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்கள், டீசர்கள் | படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‛தி கோட்' படம் செப்., 5ம் தேதியான இன்று உலகம் முழுக்க வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் படம் வெளியாவதால் அவருக்கும், வெங்கட்பிரபுவிற்கும் பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்த படம் வெற்றி பெற முதல் ஆளாய் வாழ்த்தி உள்ளார் நடிகர் அஜித் குமார்.
இதுதொடர்பாக வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவில், ‛‛கோட் படத்திற்காக விஜய் அண்ணா, என்னை மற்றும் கோட் படக்குழுவை முதல் ஆளாய் வாழ்த்திய தல அஜித் என்னுடைய ஏகே அண்ணாவுக்கு நன்றி'' என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கோட் படம் வெளியாகும் முன்பு வெங்கட் பிரபு பல பேட்டிகளில் மங்காத்தா படத்தை விட விஜய்யின் கோட் படம் பல மடங்கு வெற்றி பெற வேண்டும் என அஜித் வாழ்த்தியதாக தெரிவித்திருந்தார்.