துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சென்னை : குடிபோதையில் இரு வாலிபர்களை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மற்றும் பிற மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பவர் மனோ. தற்போதும் வாய்ப்பு கிடைக்கும் படங்களிலும் பாடுகிறார். ஏராளமான இசை நிகழ்ச்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(20). மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பயிற்சி முடித்து விட்டு அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.
அப்போது குடிபோதையில் இருந்த பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் கிருபாகரனையும் அந்த சிறுவனையும் 5 பேர் சேர்ந்து அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது . இதில் கிருபாகரன் மற்றும் சிறுவன் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து மனோவின் மகன்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.