நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
தமிழ் சினிமா உலகத்தை விடவும் தெலுங்கு சினிமா நிறையவே வளர்ந்துவிட்டது. கன்னட சினிமா போட்டி போட்டு மேலே வந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் சில தரமான படங்கள் எப்போதும் போல வந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி ஹீரோக்கள் சிலர் அடுத்தடுத்து மற்ற மொழித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சம்மதித்துள்ளது இங்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகிலும் சில முக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களது படங்களில் நடிக்க விருப்பமில்லாமல், இப்படி மற்ற மொழித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது சரியா என சில சீனியர் தயாரிப்பாளர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ள அவரது 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷ் நடித்து வரும் 'குபேரா' படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.
மற்ற மொழி நிறுவனங்கள் தமிழ்ப் படங்களை எடுக்க வந்தாலும் பெரும்பாலும் படப்பிடிப்புகளை அவர்களது மாநிலங்களில் நடத்தவே விரும்புகிறார்களாம். இதனால், இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது குறைகிறது என சினிமா தொழிலாளர்கள் கவலை கொள்கிறார்கள்.
மற்ற மொழி தயாரிப்பாளர்கள் அதிக சம்பளத்தைத் தருவதால்தான் இங்குள்ள டாப் ஹீரோக்கள் இப்படி செய்கிறார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.