மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'தி கோட்' படம் திரைக்கு வந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கிய 'பார்ட்டி' என்ற படமும் தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜெய், ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த பார்ட்டி படத்தை தயாரித்த டி.சிவா இப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இந்த பார்ட்டி படத்திற்காக பிஜி-யில் இருந்து வர வேண்டிய சான்றிதழ் தாமதமானதால் படத்தின் வெளியீடு அப்போதைக்கு தடைப்பட்டது. ஆனால் விரைவில் சான்றிதழை பெற்று வருகிற டிசம்பர் மாதம் பார்ட்டி படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரேம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஒரு பாடலை பின்னணி பாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.