தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யுடனான திருமணம், அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலா பால். பின்னர் தனது காதலரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அமலாபால். மகனுக்கு இலை என்று பெயர் சூட்டியுள்ளதை அப்போதே அறிவித்த அமலாபால், இப்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கணவருடன் மிக நெருக்கமாக முத்தமிட்டபடி தனது மகனையும் கையில் வைத்தபடி அமலாபால் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.