மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழ் சினிமாவின் டாப் வரிசை நடிகர்களின் பட்டியலில் இடம் பெற கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வருகிறார் சிவகார்த்திகேயன். அஜித், விஜயகாந்த், விஜய் ஆகியோருக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்த ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23வது படம் ஆரம்பமாகி நடந்து வந்தது.
இந்நிலையில் சல்மான் கான் நடிக்க ஒரு ஹிந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பு ஏஆர் முருகதாஸுக்கு வந்தது. 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டாராம் ஏஆர் முருகதாஸ்.
அடுத்தடுத்து சில முக்கிய படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய 23வது படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்புடன் தன் படத்தின் படப்பிடிப்பையும் நடத்துவார் முருகதாஸ் என எதிர்பார்த்து சிவகார்த்திகேயன் ஏமாந்துவிட்டார் என்கிறார்கள் கோலிவுட்டில்.
தற்போதைய நிலவரப்படி 'சிக்கந்தர்' படத்தை முடித்த பின்புதான் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நடத்த முருகதாஸ் வர உள்ளார் என்று கிசுகிசுக்கிறார்கள். முன்னணி சீனியர் நடிகர்கள் நடிக்க மறுத்த நிலையில் தான் நடிக்க சம்மதித்தற்கு இதுதான் பரிசா என சிவகார்த்திகேயன் தரப்பு கோபப்பட்டுள்ளதாம்.