சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. வரும் அக்., 10ம் தேதி படம் வெளியாக உள்ளதால் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 20) மாலை நடைபெற இருக்கிறது. இதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினி.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, ‛‛வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. கூலி படப்பிடிப்பு சிறப்பாக போகிறது'' என்றார்.
தொடர்ந்து அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க சற்றே டென்ஷனான ரஜினி, ‛‛அரசியல் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்'' என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.