இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழில், நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி நாயர், அண்மையில் வெளியான கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தனது வீட்டில் விலை மதிப்புள்ள லேப்டாப், செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற நபர் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சுபாஷும், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, பார்வதி நாயர், அவரது உதவியாளரும் அயலான் திரைப்பட தயாரிப்பாளருமான கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.