தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
2024ம் ஆண்டின் 9வது மாதத்தின் கடைசி வாரத்தில் பயணிக்க இருக்கிறோம். வரும் வாரம் செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமையில் சில படங்கள் வெளியாக உள்ளன. நேற்று முன்தினம் செப்டம்பர் 20ல் வெளியான ஏழு படங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 160ஐ கடந்துள்ளது.
இந்த 2024ம் வருடம் முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள்ளாக 50 படங்கள் நிச்சயம் வெளியாகி விடும். வரும் மாதங்களில் சில பெரிய படங்கள் வெளியாக உள்ளதால் அவற்றிற்கு முன்பும், பின்புமாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை ஓரளவிற்குக் குறைவாக இருக்கும். ஆனால், மற்ற வாரங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகும்.
இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான 160 படங்களில் 'தி கோட்' படம் 400 கோடிக்கு அதிகமான வசூலைக் குவித்துள்ளது. அந்த சாதனையை அடுத்து வர உள்ள 'வேட்டையன், கங்குவா' ஆகிய படங்கள் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள். 'ராயன், இந்தியன் 2, மகாராஜா, தங்கலான், அரண்மனை 4' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. 'டிமாண்டி காலனி 2, கருடன்' ஆகிய படங்கள் 50 கோடி வசூலைக் கடந்தாலும் லாபத்தைத் தந்த படங்களாக உள்ளன.
இதுவரை வெளியான 160 படங்களில் 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்பது ஆச்சரியமல்ல, அதிர்ச்சிதான்.