தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக இருந்த ஒரு நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு அதன் தொகுப்பாளர் மணிமேகலை விலகினார். அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பிரியங்கா தான் மணிமேகலை விலகலுக்குக் காரணம் என செய்திகள் வெளிவந்தன. பிரியங்காவின் பெயரை மணிமேகலை குறிப்பிடவில்லை என்றாலும் அவர்தான் என்பது அந்நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மணிமேகலை விலகியதோடு, யூடியூப்பில் வேறு அந்த சர்ச்சை குறித்து பேசி பல லட்சம் பார்வைகளை அந்த வீடியோவிற்காகப் பெற்றார். அதனால், அந்த நிகழ்ச்சி மீதும், நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் டிவி மீதும் ரசிகர்கள் தங்களது வெறுப்புக்களை கமெண்ட்களாகவும், பதிவுகளாகவும் சமூக வலைத்தளங்கள், யூடியூப் தளம் ஆகியவற்றில் பதிவு செய்தனர்.
அந்த சர்ச்சையை அப்படியே விட்டுவிடாமல் கடந்த வார நிகழ்ச்சியிலும், இந்த வாரத்திற்கான புரோமோவிலும் சில பேச்சுக்களை வைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று யூடியூபில் வெளியான அந்த புரோமோவிற்கு ரசிகர்கள் தங்களது வெறுப்புக்களை கமெண்ட்களாகப் பதிவு செய்துள்ளனர். எப்படி இருந்த நிகழ்ச்சி இப்படி ஆகிவிட்டது என்பது அவர்களது கமெண்ட்கள் மூலம் புரிகிறது.
சமையல் நிகழ்ச்சியை இப்படி சண்டை நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி போல மாற்றிவிட்டார்களே என ரசிகர்கள் நிகழ்ச்சியின் தரம் குறைந்துவிட்டது என கண்டித்துள்ளனர்.