முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

2024ம் ஆண்டில் தமிழ் சினிமா இன்னும் 500 கோடி வசூல் படம் ஒன்றைக் கூடக் கொடுக்கவில்லை. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் மட்டும் 400 வசூலைக் கடந்துள்ளது. அது 500 கோடியைக் கடக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் தெலுங்குப் படமான 'கல்கி 2898 எடி' படம் 1100 கோடி வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 'ஸ்திரீ 2' படம் 800 கோடி வசூலைக் கடந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்ப் படமான 'தி கோட்' படம் 400 பிளஸ் வசூலுடன் 3வது இடத்தில் தொடர்கிறது.
கடந்த ஆண்டான 2023ம் ஆண்டில் ரஜினி நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படமும், விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படமும் 600 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன.
இந்த ஆண்டில் 'தி கோட்' 400 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதால் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள 'வேட்டையன்' படம் அந்த வசூலை முறியடித்து 500 கோடி வசூலைக் கடக்கும் என ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளார்கள்.
போன வருடம் ரஜினி, விஜய் போட்டி போலவே, இந்த வருடமும் ரஜினி, விஜய் போட்டிதான் இருக்கப் போகிறது.