மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
கவுண்டமணி செந்தில் ஜோடி மற்றும் வடிவேலுவின் வெற்றியே அவர்களது காமெடி கிராமங்களை பின்னணியாக கொண்டதுதான். தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் காமெடி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிர் களத்தில் நின்று கிராமத்து காமெடிகளால் கவனம் ஈர்த்தவர் காளி என்.ரத்னம். என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் ஜோடி போன்று காளி என்.ரத்னம் - ராஜகாந்தம் ஜோடியும் காமெடியில் சாதித்தனர்.
காளி என்.ரத்னம், 1897ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள மலையப்ப நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 12 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். 'கோவலன்' என்ற நாடகத்தில் அவர் காளி வேடத்தில் நடித்து புகழ்பெற்றதால் வெறும் ரத்னமாக இருந்தவர் காளி. என்.ரத்னம் ஆனார்.
பதிபக்தி, ராஜமோகன், மாத்ரு பூமி, சபாபதி, மனோன்மணி, திவான் பகதூர், பர்மா ராணி, சூரிய புத்ரி, சிவலிங்க சாட்சி, நாடக மேடை, பிருதிவி ராஜன், போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 14 வருடங்கள் சினிமாவில் நடித்தவர் 1950ம் ஆண்டு காலமானார்.