மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழில் முகமூடி படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அதேசமயம் ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் இவரை தேடி மீண்டும் விஜய் பட வாய்ப்பு வந்துள்ளது. கோட் படத்திற்கு பின் வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். இந்த படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க உள்ளார் விஜய். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாளில் துவங்க உள்ளது. நேற்று முதல் படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் ஹிந்தி நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது.
இன்று நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அறிவித்துள்ளனர். அவர் நாயகியாக நடிக்கிறார். அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் இன்னும் ஏராளமான முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். ஒவ்வொன்றாக அதன் அறிவிப்பு வெளிவர உள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.