நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. ‛மிருகம், குசேலன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் சில படங்களிலும், டிவி சீரியலிலும் நடிக்கிறார்.
சென்னை, மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறத்தில் புகுந்த திருடர்கள் இருவர் அங்கிருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சித்தனர். அப்போது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனா, திருடர்களை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்போது திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சோனா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அடிப்படையாக வைத்து திருடர்களை பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.