நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகர் அஜித்குமார் சோசியல் மீடியாவில் கணக்கு தொடங்கவில்லை என்றாலும் அவரது மனைவியான ஷாலினி அஜித்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி இருந்தார். இவர், தங்களது குடும்பத்தினர் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது மகன் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ஷாலினி அஜித்.
அந்த புகைப்படம் ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு சென்றிருந்தபோது இந்த புகைப்படத்தை எடுத்து உள்ளார்கள். மேலும் அஜித்தின் மகன் ஆத்விக், ரியல் மாட்ரிக் அணியின் ரசிகராம். அதன் காரணமாகவே ஸ்பெயின் நாட்டு மைதானத்தில் ரியல் மாட்ரிக் அணியுடன் பில்லர் ரியல் அணி மோதிய போட்டியை அவர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்.