மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினி உடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அதோடு தமிழ் திரை உலக சார்ந்த பல பிரபல நடிகர்களும் இன்றைய தினம் தியேட்டர்களுக்கு சென்று இந்த வேட்டையன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் தனுசும் இன்று காலை 9 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து வேட்டையன் படம் பார்த்து ரசித்துள்ளார் . இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்திலும் வேட்டையன் ரிலீஸ் குறித்தும் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், வேட்டையன் டே. சூப்பர் ஸ்டார், தலைவர் தரிசனம் என்று தெரிவித்து இருக்கிறார்.