சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ்நாட்டை சேர்ந்த நட்டி என்கிற நட்ராஜ் பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தார். பின்னர் நடிகராகி நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கதம் கதம், எங்கிட்ட மோதாதே, கர்ணன், மகாராஜா படங்களில் நடித்தார். தற்போது வெளிவர இருக்கும் 'பிரதர்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் 'ஆண்டவன் அவதாரம்'. இதற்குமுன் 'நஞ்சுபுரம்', 'அழகு குட்டி செல்லம்', 'சாலை' ஆகிய படங்களை இயக்கியுள்ள சார்லஸ், தனது லைட் சவுண்ட் அன்ட் மேஜிக் நிறுவனத்துக்காக இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ராகவ் நடிக்கிறார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, நவ்னீத், ராகவ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சார்லஸ் கூறும்போது "இப்படத்துக்கு 'அவதாரம்' என்று பெயரிட நினைத்தேன். அந்த டைட்டில் நாசரிடம் இருப்பதால், 'ஆண்டவன் அவதாரம்' என்று பெயரிட்டேன். நட்டி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தந்தை - மகன், அண்ணன் - தம்பி வேடமாக இருக்காது. சயின்ஸ் பிக்ஷன் என்றாலும், நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து படமாக்குகிறோம்" என்றார்.