வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் விஜயகாந்த் போன்று வேடமிட்டு நடித்தும் ஆடியும் வருகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களின் தோற்றம் ஓரளவிற்கு பொருத்தமாக இருப்பதால் மக்களும் அவர்களை ரசித்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சிங்கப்பூர் தமிழர் அசோகன்.
சிங்கப்பூர் சிவாஜி என்ற அழைக்கப்ட்ட இவர் அங்கு திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் சிவாஜி போன்று நடனமாடி மக்களை மகிழ்விப்பார். சில மலேசிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜி வேடமிட்டு ஆடிக் கொண்டிருந்தவர் ஆடிய நிலையிலேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்துக்கு சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு இரங்கல் தெரிவித்துள்ளார்.