தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அர்ஜூன். பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக குணச்சித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கிறார். நடிப்பை தாண்டி இயக்குனராகவும் பயணிக்கும் இவர், ‛ஜெய்ஹிந்த், எழுமலை' உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். கடைசியாக 2018ல் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கினார்.
அதன்பின் தெலுங்கில் ஒரு தனது மகளை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்தபடம் டிராப் ஆனது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் இப்போது 'சீதா பயணம்' என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதாக அறிவித்துள்ளார். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார் அர்ஜூன். அனேகமாக இந்த படத்தில் அவரின் மகள் ஐஸ்வர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அர்ஜூன் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.