சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படம் இன்று 50வது நாளைத் தொட்டுள்ளது.
கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் இப்படம் மாபெரும் வெற்றி என்றில்லாமல் வெற்றி என்று குறிப்பிடும் அளவில்தான் இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் 100 கோடி ரூபாய் பங்குத் தொகையைக் கொடுத்ததால், அதற்காக விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, வினியோகஸ்தர் ராகுல் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த அளவில் வசூலைப் பெறவில்லை என்பதும் அங்கிருந்த வந்த தகவல்கள்.
அக்டோபர் 3ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் வெளியாகி 20 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் ஓடி வருவது ஆச்சரியம்தான். சென்னையில் 20 தியேட்டர்களில் இப்படம் ஓடிவருவதாக 50வது நாள் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 455 கோடியை வசூலித்ததாக அக்டோபர் 9ம் தேதி இப்படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் வசூல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.