சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படம் பான் இந்தியா படமாக டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு வெளியானது.
எதிர்பாராத அளவில் பெரிய வெற்றியைப் பெற்று ஹிந்தியிலும் சேர்த்து வசூல் சாதனை புரிந்தது. சுமார் 400 கோடி வரையில் அப்படம் வசூலித்தது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். அதனால், இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 'பாகுபலி 1' வந்து வசூலித்த பிறகு 'பாகுபலி 2' வெளிவந்து முதல் பாகத்தை விடவும் வசூல் சாதனை புரிந்தது. அதுபோல 'புஷ்பா 2' படத்திற்கும் நடக்கும் என நம்புகிறார்கள்.
அதனால், 'புஷ்பா 2' படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வியாபாரம் நடைபெற்றுள்ளதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை 225 கோடி, வட இந்திய உரிமை 200 கோடி, தமிழக உரிமை 50 கோடி, கர்நாடகா 30 கோடி, கேரளா 20 கோடி, வெளிநாடுகள் 120 கோடி என மொத்தமாக 645 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை மட்டும் 275 கோடி, இசை உரிமை 65 கோடி, சாட்டிலைட் டிவி உரிமை 85 கோடி என தியேட்டர் அல்லாத இந்த உரிமைகள் மூலம் மட்டுமே 425 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாம். இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இந்த தியேட்டர் அல்லாத உரிமைகள் மூலம் மட்டுமே படத்திற்கான செலவுத் தொகை தயாரிப்பாளருக்கு நேரடியாகக் கிடைத்திருக்கும். தியேட்டர் வியாபாரம், அதன் பிறகான வசூல் அனைத்தும் படத்திற்குக் கிடைக்கப் போகும் லாபக் கணக்கில் சேரும்.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, தியேட்டர் வசூலும் சிறப்பாக அமைந்துவிட்டால் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 எடி' படங்களைப் போல 'புஷ்பா 2' படமும் அந்த 1000 கோடி வசூல் வரிசையில் சேரும் வாய்ப்பு வரும் என தெலுங்குத் திரையுலகினர் அதிகம் நம்புகிறார்கள்.