தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் கடந்த சில வருடங்களாகவே மலையாள திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதே சமயம் சற்றும் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் வைக்காத பாலா தனது திருமணங்கள் குறித்தான சர்ச்சையில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் தனது முறைப்பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இது இவருக்கு நான்காவது திருமணமாகும்.
கடந்த 2008லேயே கர்நாடகாவை சேர்ந்த சந்தனா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாலா, இரண்டு வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு மலையாள பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவந்திகா என்கிற ஒரு குழந்தையும் உள்ள நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் பாலா. அதைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து கடந்த 2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவருடனும் வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் தான் தற்போது முறைப்பெண்ணான கோகிலாவை திருமணம் செய்துள்ளார் பாலா.
ஆனால் ஆச்சரியமாக பாலாவின் உறவுப்பெண்ணான கோகிலா சிறுவயதிலிருந்தே பாலாவை நேசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலாவின் மீதான தனது அன்பை யாருக்கும் தெரியாமல் தனது டைரியில் எழுதி பாதுகாத்து வந்துள்ளார். தனது மூன்றாவது மனைவி எலிசபெத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மன அமைதிக்காக பாலா சென்னையில் தங்கி இருந்த சமயத்தில் தான் கோகிலா தன்மீது சிறுவயதில் இருந்தே கொண்டிருந்த காதல் அவருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கோகிலாவின் அன்பு மற்றும் வயதான தனது தாயின் ஆசை ஆகியவற்றை நிறைவேற்றும் விதமாகவும் கோகிலாவை தற்போது உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா. அந்த வகையில் தனது சிறு வயது காதல் பாலாவுடன் முதல் திருமணத்தில் கைகூடாவிட்டாலும் அவரது நான்காவது திருமணத்திலாவது ஒன்று சேர முடிந்ததே என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் புது மனைவி கோகிலா.