துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் திரிஷா. தனது படம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், தனது சுற்றுப்பயணங்கள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிடும் திரிஷா அவ்வப்போது வளர்ப்பு பிராணிகள் குறித்தும் பதிவிடுவார். குறிப்பாக தெரு நாய்கள் பற்றி அதிகமாக பதிவிடுவார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு புதிராக இருக்கிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறார்கள்.அதில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் திரிஷா மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திரிஷா, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' மற்றும் கமல்ஹாசனுடன் 'தக் லைப்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.