தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 'ஆப்பிள் பெண்ணாக' கொண்டாடப்பட்டவர் பூமிகா. 'ரோஜா கூட்டம்', 'ஜில்லுனு ஒரு காதல்' என பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது 'பிரதர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிரதர் படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள பூமிகா தனது நேர்காணல்களில் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "நான் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மணிரத்தினம் சார் கம்பெனியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மணிரத்தினம் சார் படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு யாராவது மறுப்பு சொல்வார்களா நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
பின்னர் தான் தெரிந்தது அதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது. அப்போது நான் பல தமிழ் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனக்கு அது சரி என்று பட்டது. அதனால் நடிக்க மறுத்து விட்டேன்.
அந்தப் படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். நான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு பூமிகா கூறியிருக்கிறார்.