ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.பாக்யராஜ் 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பிறகு சுவரில்லாத சித்திரங்கள், கன்னி பருவத்திலே படங்களில் நடித்தார். அவர் தயாரித்து, இயக்கிய முக்கியமான படம் 'ஒரு கை ஓசை'. இந்த படத்தை உருவாக்கும்போது அவர் பல எதிர்ப்புகளை சநதித்தார்.
முதலாவதாக படத்தின் தலைப்புக்கே எதிர்ப்பு. ஒரு கை கொண்டு எப்படி ஓசை எழுப்ப முடியும், படத்தின் டைட்டில் நெகட்டிவாக உள்ளது. 'இரு கை ஓசை' என்று மாற்றுங்கள் என விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதற்கு விளக்கமளித்த கே.பாக்யராஜ் “சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பார்கள். ஆனால் நான் என் படத்திற்கு சுவரில்லாத சித்திரங்கள் என நெகட்டிவ் தலைப்பு தான் வைத்தேன். அந்த படம் வெற்றி பெறவில்லையா என்று கேட்டு அவர்களை சமாளித்தார்.
அடுத்து கே.பாக்யராஜ் இந்த படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்தார். பாக்யராஜின் பிளஸ் பாயின்ட்டே அவரது டயலாக்கும், டயலாக் டெலிவரியும்தான். அதைத்தான் மக்கள் ரசித்தார்கள். அப்படி இருக்கும்போது இப்போது வாய் பேச முடியாதவராக நடித்தால் எப்படி? என்று அதற்கும் எதிர்ப்பு வந்தது. அப்போது பாக்யராஜ் “பேச முடியாதவன் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லையா? அவன் சிரிக்க மாட்டானா, இந்த கேரக்டரிலும் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பேன்” என்று சவால் விட்டு அதில் வெற்றியும் பெற்றார்.
மூன்றாவது எதிர்ப்பு நாயகியாக நடித்த அஸ்வினி பற்றி, அப்போதுதான் அவர் 'உதிரிப்பூக்கள்' படத்தில் சோகமான ஒரு கேரக்டரில் நடித்தார். அதிலும் அவர் முகமே சோகமான முகம்தான். ஆனால் அப்படிப்பட்டவரை வேறொரு கோணத்தில் காட்ட விரும்பினார் பாக்யராஜ். அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தோற்றார். படம் வெளிவந்ததும் அஸ்வினியின் முதிர்ச்சியான தோற்றம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. பின்னாளில் பாக்யராஜும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்.