சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்ந்து வந்த சிம்பு, தற்காப்பு கலைகளையும் கற்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் பிஸ்னஸ் என பல காரணங்களால் இந்த படத்தினை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியது.
ஆனாலும், இந்த கதையை விட மனமில்லாமல் சிம்புவே இதற்கான முன் தயாரிப்பு பணிகளின் செலவை செய்து வந்தார். மறுபுறம் வேறு தயாரிப்பாளரை தேடி வந்தார். இந்த நிலையில் தற்போது ஒருமனதாக சிம்புவே இந்த படத்தை ஆட்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்க இருப்பதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிம்பு, தனது தந்தையின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்கள் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.