வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மேஜர் முகுந்த் வரதரராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்தனர். இந்த படத்தை ரஜினி பார்த்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மேலும் அவர் படத்தை பாராட்டிய ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கமலின் ராஜ்கமல் நிறுவனம் எக்ஸ் தளத்தில் போட்டோ, வீடியோவை பகிர்ந்து, ‛‛ரஜினிகாந்த் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன்,ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்'' என குறிப்பிட்டுள்ளனர்.