ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
2024ம் ஆண்டு ஆரம்பமாகும் போது இந்த வருடம் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளது என தமிழ் சினிமா உலகமும், ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
இந்த பத்து மாதங்களில் இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கிவிட்டது. இவற்றில் மொத்தமாக 5 படங்கள் வரை அனைத்து விதத்திலும் லாபம் தந்த படங்களாக இருந்திருக்கும். “அரண்மனை 4, மகாராஜா, கருடன், ராயன், தி கோட், பிளாக், அமரன்” ஆகிய படங்களை, தமிழக வசூலைப் பொறுத்தவரையில் லாபகரமான படங்கள் என திரையுலகத்திலேயே சொல்வார்கள்.
10 மாதங்களில் 200 வரை வந்த படங்களில் 6 படங்கள் மட்டுமே லாபம் என்பது அதிர்ச்சிதான். இன்னும் எஞ்சியுள்ள இரண்டு மாதங்களில் எப்படியும் 50 படங்கள் வரை வெளிவந்துவிடும். இருந்தாலும் இரண்டே இரண்டு பெரிய படங்கள்தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய படங்களாக இருக்கின்றன.
சூர்யா நடித்து இந்த மாதம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள 'கங்குவா', விஜய் சேதுபதி நடித்து அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள 'விடுதலை 2' ஆகிய படங்கள்தான் முக்கியமான படங்கள். டிசம்பர் 5ம் தேதி வெளியாக டப்பிங் படமான 'புஷ்பா 2' படத்திற்கு தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. முதல் பாகத்தைப் போலவே விறுவிறுப்பாக இருந்தால் இங்கும் வரவேற்பு பெறலாம்.
இந்த ஆண்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால், ஜீவா, அருண் விஜய், விஜய் ஆண்டனி, சசிகுமார், அருள்நிதி, விஷ்ணு விஷால், ஹரிஷ் கல்யாண், சந்தானம், சூரி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, விமல், அரவிந்த்சாமி, பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் வெளிவந்துவிட்டன.
அஜித், சிலம்பரசன் ஆகியோரது படங்கள் இந்த ஆண்டில் வெளியாகவில்லை. இருவரது படங்களும் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகவா லாரன்ஸ், ஜெய், விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், ஆர்யா ஆகியோரது படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. அடுத்த வருடமாவது அனைவரது படங்களும் வெளியாகும் வருடமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.