தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா 2'. இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்து அதற்காக தேசிய விருதையும் வென்றார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். முதல் பாகத்தின் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. அதற்கான பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். இரண்டாம் பாகத்திற்கும் அவர்தான் இசையமைத்து வந்தார். படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இன்னும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.
இந்நிலையில் இப்படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. தமன் மற்றும் 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் அமைக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்த பின்னணி இசை, படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்குப் பிடிக்கவில்லையாம். அதனால், இரண்டாவது வெர்ஷனாக தமன் அமைத்துத் தர உள்ள பின்னணி இசையை வைத்து யாருடைய பின்னணி இசையை படத்தில் வைக்கலாம் என முடிவு செய்யப் போகிறார்களாம். அஜனீஷ் லோக்நாத் சில முக்கிய காட்சிகளுக்கு பின்னணி இசை அமைப்பாராம்.
படத்தில் மூன்று பேருடைய பின்னணி இசையும் வருமா அல்லது தமன், அஜனீஷ் பின்னணி இசை மட்டும் வருமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.
இப்படியான தகவல் டோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும்.