துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'தக் லைப்' படம் 2025ம் வருடம் ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாகும் என இன்று அறிவித்தார்கள். அவ்வளவு நாட்கள் இருக்கும் போது வெளியீட்டு அறிவிப்பு ஏன் என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
கமல் படம் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டதால் உடனே அடுத்த கேள்வியாக ரஜினி படம் எப்போது வரும், அஜித் படம் எப்போது வரும் என்று எழுந்துள்ளது. ரஜினி நடித்து வரும் 'கூலி' படம் 2025 ஏப்ரல் மாதமும், அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படம் மே மாதமும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் 2025 பொங்கலுக்கு என அறிவிக்கப்பட்ட 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீடு மே மாதத்திற்குத் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
2024ல் அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்று இந்த வருட ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது இந்த வருடம் நடக்காமல் அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது.