பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் |

அந்தக் காலத்தில் படத்தில் நாயகியாக நடிப்பவர்களுக்கு நடனம் ஆடத் தெரிய வேண்டும், பாடத் தெரிய வேண்டும். பிற்காலத்தில் நடிக்க தெரிய வேண்டியதுமில்லை என்று மாறியது வேற கதை. நாயகிகள் ஒரு புறம் நடித்தாலும் நடனத்திற்கென்றே சில நடிகைகள் இருந்தார்கள். அதாவது கவர்ச்சி நடனத்திற்கு, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா இப்படியான நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்தார்கள். இப்போது நாயகிகளே கவர்ச்சியாக நடனம் ஆடுவதால் கவர்ச்சி நடன நடிகைகள் என்று பெரிதாக யாரும் இல்லை. ரிஷா, மஸ்காரா அஸ்மிதா என ஒரு சிலர் சிறிய படங்களில் ஆடுகிறார்கள்.
இதற்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலாக நடன நடிகையாக இருந்தவர் குமாரி கமலா. ஆனால் இவர் பாரம்பரிய, பரதநாட்டிய நடன நடிகை. மயிலாடுதுறையில் பிறந்த கமலா, 3 வயதில் இருந்தே நடனம் கற்க ஆரம்பித்தார். கதக், பரதநாட்டியம், மேற்கத்திய நடனங்களை முறைப்படி குருமார்களிடம் கற்றார். மேடைகளில் ஆடிவந்த இவர், குமாரி கமலா என்ற பெயருடன் திரைப்படங்களில் ஆடத் தொடங்கினார்.
1938ம் ஆண்டு 'சேவாதனம்' படத்தில் ஆடினார். 1944ல் 'ஜகதலப்பிரதாபன்' படத்தில் ஆடிய பாம்பு நடனம். 1947ல் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாடலை பாடி இரட்டை வேடத்தில் ஆடியது, 'பராசக்தி' படத்தில் 'ஓ ரசிக்கும் சீமானே' போன்ற பாடல்கள் அவரது சாதனைகளாக அமைந்தது. சுமார் 50 படங்களில் நடனம் மட்டும் ஆடியுள்ளார்.
அதோடு ஸ்ரீவள்ளி, பாலயோகினி, ஜகதலப்பிரதாபன், கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்த மீரா, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பாத்திபன் கனவு, சிவகங்கை சீமை , சிவகாமி, பராசக்தி, பாவை விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார்.