நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சில நட்சத்திரங்கள் திடீரென ஒரே இரவில் எல்லோர் மனங்களையும் வெல்வார்கள். அப்புறம் காணாமல் போய்விடுவார்கள். இப்படியான நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கே.எல்.வி.வசந்தா. காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றத்தூரைச் சேர்ந்த இவர், 'குன்றத்தூர் வல்லிகண்ணு' என்ற பெயரில் நாடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்காக கே.எல்.வி வசந்தா என்று பெயரை மாற்றி நடிக்க ஆரம்பித்தார்.
1938ம் ஆண்டு, கோயம்புத்தூர் சினி டோன் நிறுவனம் தயாரித்த 'ஸ்ரீ கந்தலீலா' படத்தில் அறிமுகமானார். மேத்தா படத்தை இயக்கினார். படம் பெரிதாக கவனம் பெறவில்லை. 1939ம் ஆண்டு இவர் நடித்த 'ரம்பையின் காதல்' பெரிய வெற்றி வெற்றி பெற்றது. வசந்தாவின் அழகில் மக்கள் மயங்கினர். 'பூலோக ரம்பை' என்று அவருக்கு பட்டப்பெயர் கொடுத்து கொண்டாடினர். அதன் பிறகு 'பூலோக ரம்பா' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை எஸ்.எஸ்.வாசன் வெளியிட்டார். அதன் பிறகு எஸ்.எஸ்.வாசன் தான் தயாரிக்க இருந்த 'சந்திரலேகா' படத்தில் வசந்தாவைவே நாயகி ஆக்கினார், 'பூலோக ரம்பை வசந்தா நடிக்கும் சந்திரலேகா' என்றே விளம்பரம் செய்தார்.
ஆனால் 'சந்திரலேகா' படத்தில் வசந்தா நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ஒரு பிரமாண்ட படத்தை வசந்தா ஏன் மறுத்தார் என்பது அப்போது பெரிய கேள்வி குறியாக இருந்தது. அந்த நேரத்தில் வசந்தா மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்தை காதலித்து திருமணம் செய்திருந்தார். கணவரின் தொழில்போட்டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வசந்தா தயங்கியதே காரணம் என்பார்கள்.
பின்னர் சத்யவாணி, மதனகாமராஜன், ராஜராஜேஸ்வரி, பர்மா ராணி, சுபத்ரா, சுலோச்சனா ஆகிய படங்களில் மட்டுமே வசந்தா நடித்தார். அவர் ஒரு வேளை 'சந்திரலேகா'வில் நடித்திருந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் முன்னணி நடிகையாக இருந்திப்பார் என்று சினிமா வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.