வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
எண்பதுகளின் இறுதியில் தமிழில் வெளியான பூந்தோட்ட காவல்காரன், நல்லவன், மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். மலையாள திரை உலகில் ஒரு விஜயசாந்தி என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அதிக படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் அனைத்திலும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட வாணி விஸ்வநாத் மலையாள வில்லன் நடிகர் ஆன பாபுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் சினிமாவில் நடிக்காமல் பல வருடம் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் வாணி விஸ்வநாத். அந்த வகையில் தற்போது ரைபிள் கிளப், ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இதில் ரைபிள் கிளப் படம் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகிறது. இதில் ஒரு மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். அதே சமயம் ஒரு அன்வேசத்தின்டே துவக்கம் படத்தில் ஒரு வில்லத்தனம் வாய்ந்த லேடி தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இது ஒரு புலனாய்வு திரில்லர் ஆக உருவாகிறது.