தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

திரையுலகில் புகழ்பெற்றவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கி விடும். அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக அனைவராலும் கை காட்டப்படுபவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தங்களது 29 வருட மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாகவும், தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கு காரணம் என்றும் ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் அண்மையில் அறிவித்தனர். ரஹ்மான் தம்பதியின் விவாகரத்து வெளியான அடுத்த சில மணிநேரங்களில் மோகினி டே என்ற இசைக்கலைஞரின் விவாகரத்து அறிவிப்பு பெரும் பேசுபொருளாக மாறியது.
இவர், ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் கிடார் இசைக்கலைஞராக இருப்பதே அதற்கு காரணம். இவரையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அனைவரின் கவனமும் மோகினி டே பக்கம் திரும்பியது. இதுபோன்ற வதந்திகள் பரவி வருவது தமது மனம் வருத்தம் அடைவதாக ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீனும் கூறி இருந்தார்.
இந்நிலையில் தம்மைச் சுற்றி வரும் வதந்திகள் குறித்து இசைக்கலைஞர் மோகினி டே முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு தமது நிலையை கூறி உள்ளார். அவர் அந்த பதிவில் கூறி உள்ளதாவது; ஆதாரமற்ற, தவறான தகவல் பரப்பப்படுவது ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எங்களின் நிகழ்வுகளை (விவாகரத்து விவகாரம்) கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது. அவரது இசைக்குழுவில் பல ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன்.
ஏ.ஆர். ரஹ்மான் எனது தந்தையை போன்றவர். நான் மிகவும் மதிக்கும் நபர். எங்கள் இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தனிமை என்ற முடிவு மிகவும் வலி மிகுந்தது. எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இவ்வாறு அவர் தமது வீடியோ பதிவில் கூறி உள்ளார்.