தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஒரே இரவில் எழுதிய கதைதான் 'ஓர் இரவு' என்ற பெயரில் திரைப்படம் ஆனது. அதேபோல கே.பாக்யராஜ் ஒரே இரவில் எழுதிய கதைதான் 'இன்று போய் நாளை வா'. ஒரே பெண்ணை காதலிக்கும் 3 நண்பர்களின் கதை. அந்த பெண்ணின் மனதை வெல்வது யார்? எப்படி என்பதுதான் திரைக்கதை. மூவரில் ஒருவர், பணக்காரர், கல்லூரி மாணவர். இன்னொருவர் ஏழ்மையானவர், வேலைக்குச் செல்பவர். அடுத்தவர், நடுத்தர வர்க்கம், வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழிப்பவர். 1980களின் இளைஞர்களின் காதல் கலாட்டாவை யதார்த்தமாக பிரதிபலித்த படம். காமெடி, சென்டிமென்ட் கலந்த காதல் கதை. அதோடு ஹிந்தி திணிப்பு, வர்க முரண்பாடுகளையும் சொன்ன படம்.
இந்த படத்தில் கே.பாக்யராஜோடு அவரது நிஜமான நண்பர்கள் பழனிச்சாமி, ராம்லி நடித்தார்கள், ராதிகாதான் ஹீரோயின். ராதிகாவின் அப்பா வி.எம்.ஜான். அம்மா காந்திமதி. தாத்தா கல்லாபெட்டி சிங்காரம். ரவுடியாக சூர்யகாந்த். உடன் கைத்தடியாக செந்தில். இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டே முழு கதையும் சொல்வார் கே.பாக்யராஜ். இன்றைக்கு பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படம்.