துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
2024ம் ஆண்டு இன்னும் ஒரே மாதத்தில் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் டிசம்பர் மாதத்தில் 'விடுதலை 2' உள்ளிட்ட ஒரு சில முக்கிய படங்கள்தான் வெளியாக உள்ளன. அதற்கடுத்து பண்டிகை நாளாக 2025ல் பொங்கல் நாளில்தான் பெரிய படங்கள் வெளிவரும்.
பொங்கலுக்கு சில படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது அவற்றில் சில மாற்றங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
நேற்றிரவு 'விடாமுயற்சி' படத்தின் டீசரை திடீரென வெளியிட்டு, அதில் கடைசியில் படத்தின் வெளியீடு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் படம் பொங்கலுக்கு வருமா அல்லது அஜித் நாயகனாக நடித்து வரும் மற்றொரு படமான 'குட் பேட் அக்லி' வருமா என்ற குழப்பம் இருந்து வந்தது. அது இப்போது தெளிவாகிவிட்டது.
அஜித் நடித்து கடைசியாக கடந்த வருடம் 2023 பொங்கலுக்கு 'துணிவு' படம் வந்தது. இந்த வருடம் எந்தப் படமும் வெளியாகவில்லை. சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் வருவதால் தமிழகத்தில் அப்படம் அதிகத் தியேட்டர்களில் வெளியாகும். அதனால் மற்ற படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்குக் கூட தமிழகத்தில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை.