கமல்ஹாசன் சொத்து ரூ.305 கோடி, கடன் ரூ.49 கோடி | ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' |
ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. அதோடு அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டியிருப்பதாக தெரிவித்திருந்த ஆலியா மானசா, தற்போது கேரளா ஆலப்புழாவில் இரண்டு கோடி மதிப்பில் போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆலப்புழா சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த போட் ஹவுஸ், இரண்டு படுக்கை அறை, பிரமாண்ட டைனிங் டேபிள் என நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.