விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

1940 வரையிலான தமிழ் படங்கள் பெரும்பாலும் இந்து புராண கதைகள், ஆன்மிக குருக்கள் ஆகியோரை மையமாக கொண்டே உருவானது. வாழ்க்கை பிரச்னைகளுக்கு ஆன்மிக குருமார்கள் தரும் பதில்கள், புராண படங்களில் கிருஷ்ண பகவான் தரும் தீர்வுகள் என்பதாக அமைந்தது.
இந்த நிலையில் பவுத்த மத பின்னணியில் உருவாகி புத்தர் பிரச்னைகளை தீர்த்த படமாக உருவானது 'அசோக்குமார்'. தியாகராஜ பாகவதரின் வெள்ளி விழா படங்களில் இதுவும் ஒன்று. அவருடன் சித்தூர் வி.நாகையா, பி.கண்ணாம்பா, டி.வி.குமுதினி, எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். ராஜா சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
அசோக சக்ரவர்த்தியின் மகன் குணாளன்(பாகவதர்) போர்களில் வெற்றி பெற்று திரும்பியதும் அவருக்கு திஷ்யரக்ஷி என்ற இளவரசியை மணமுடிக்க விரும்புகிறார் மன்னர் அசோகர். ஆனால் குணாளனோ காஞ்சனமாலா(குமுதினி) என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் திஷ்யரக்ஷி சதிவேலைகள் செய்து குணாளனையும், காஞ்சனமாலாவையும் அரண்மனையை விட்டு விரட்டுகிறார். அதோடு குணாளனின் கண்கள் பறிக்கப்படுகிறது. இதனால் குணாளனும், காஞ்சனமாலாவும் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மையை அறியும் அசோக சச்ரவர்த்தி மகனை நாடு முழுக்க தேடி அலைகிறார். கடைசியில் அவனை கண்டுபிடிக்கிறார். அப்போது புத்தர் தோன்றி குணாளனுக்கு கண்பார்வை தருவதோடு, அசோகரையும் நல்வழிப்படுத்துகிறார். இதுதான் படத்தின் கதை.
இது வரலாறு அல்ல, வடநாட்டில் சொல்லப்பட்டு வந்த நாட்டுப்புற கதை. ஏற்கெனவே மவுன படமாகவே இந்த கதை தயாராகி இருந்தது. பின்னர் ஹிந்தியிலும், தமிழிலும் பேசும் படமாக தயாரானது.
'உனை கண்டு மயங்காத பேர்களுண்டோ...' என்ற பாகவதர் பாடல் இன்றைக்கும் காற்றோடு கலந்து காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. படத்தை யு டியூப்பில் இப்போதும் காணலாம்.