சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் சரத்குமார் கடந்த சமீப வருடங்களாக பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'தி ஸ்மைல் மேன்' என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சியாம் பிரவீன் இயக்கி உள்ளனர். இதில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக அதே சமயம் ஞாபக குறைபாடு கொண்ட அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட மனிதராகவும் நடித்துள்ளார் சரத்குமார்.
சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மீண்டும் அவரது டைரக்சன் ஆசை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நடித்த தலைமகன் படத்தின் போது திடீரென இயக்குனர் விலக வேண்டிய சூழல் வந்ததால் அந்த பொறுப்பை எடுத்து நானே இயக்குனராக மாறினேன். மற்றபடி எனக்கு டைரக்ஷனில் மிகப்பெரிய ஆர்வம் இல்லை. ஆனாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் சேர்ந்து நானும் பயணிப்பது போல ஒரு கதையை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும். ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் எம்ஜிஆரை இந்த படத்தின் மூலம் மீட்டுக் கொண்டு வருவதுடன் அவருடன் நடிக்கும் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார் சரத்குமார்.