திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என பன்முகம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. நடிப்பு தாண்டி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார். சென்னையில் 'விஜய் ஆண்டனி 3.0' என்ற பெயரில் இன்று(டிச., 28) ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் இவரின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஆனால் காவல்துறையின் அறிவுரையின் பேரில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள், போக்குவரத்து நெரிசல் என சர்ச்சையானது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது.