ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது ‛பேபி ஜான்' படம் மூலம் ஹிந்தியிலும் நுழைந்துள்ளார். இதற்கிடையே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டார். சுமார் 15 வருடங்கள் காதலித்து வந்த இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் செய்தனர்.
இந்நிலையில் தனது 15 ஆண்டு காதல் குறித்து சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி: எங்கள் உறவை ரகசியமாக வைத்திருக்கவே விரும்பினேன். யாருக்கும் தெரியாது. சினிமா துறையில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். சமந்தா, ஜெகதீஷ் ஆகியோருக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். இயக்குனர் அட்லி, பிரியா, நடிகர் விஜய், நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்ய லட்சுமி, எங்கள் நண்பர்கள் என சினிமா துறையில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். நான் மற்றும் ஆண்டனி இருவரும் எங்கள் சொந்த விஷயங்களை முடிந்தவரை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறோம். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருப்பார்.
நான் 12ம் வகுப்பு படிக்கும் போது ஆர்குட்டில் ஆண்டனியை பாலோ செய்தேன். அவர் என்னை விட ஏழு வயது மூத்தவர். அப்போது அவர் கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு மாதம் ஆர்குட்டில் நன்றாக சாட் செய்தோம், பிறகு ஒரு உணவகத்தில் சந்திக்க சென்றபோது, நான் என் குடும்பத்தினருடன் இருந்தேன், அதனால் அவரிடம் பேச முடியவில்லை. அதனால் அவருக்கு கண்ணடித்து விட்டுச் சென்றேன். பிறகு, 'தைரியம் இருந்தால் எனக்கு காதலைச் சொல்லுங்க' என்று சொன்னேன். 2010ல் முதன் முதலில் என்னிடம் காதலைச் சொன்னார். 2016ல் எங்கள் உறவு மேலும் நெருக்கமானது. திருமணம் வரை கழற்றக் கூடாது என்று ஒரு மோதிரம் கொடுத்தார். என்னுடைய எல்லா படங்களிலும் அந்த மோதிரத்தைப் பார்க்கலாம்.
எங்களது திருமணம் ஒரு கனவு மாதிரி இருந்தது. ஏனென்றால் நாங்கள் ஓடிப்போகலாம் என்றுகூட கெட்ட கனவுகளைக் கண்டிருக்கிறோம். என்னுடைய இதயம் நிறைந்திருந்தது, இது எங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணம். எங்கள் உறவு ஆறு வருடங்கள் தொலைதூரத்தில் இருந்தது. எங்களை ரொம்பவே நெருக்கமாக்கியது என்றால் கொரோனா காலகட்டம்தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இவர் எனக்கு கணவராக கிடைத்தது அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் கூறினார்.