வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‛ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துவிட்ட சூர்யா அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கின்றார். இதில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். .சூர்யாவிற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் கதாபாத்திரமாக உள்ளது என்கிறார்கள்.