மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களை முடித்துவிட்ட நடிகர் அஜித்குமார், சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார். துபாயில் நடக்கவுள்ள '24எச்' என்ற ரேஸூக்கான பயிற்சியில் அஜித் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்படி பயிற்சியில் ஈடுபட்டபோது சில நாட்களுக்கு முன்பு கார் விபத்துக்குள்ளானது. ஆனால் அவர் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் காயமின்றி தப்பினார். அடுத்த நாளே அவர் பயிற்சியை தொடர்ந்தார்.
இந்நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் '24எச்' ரேஸிங் இன்று (ஜன.,10) நடக்கிறது. அதற்குத் தயாராகியுள்ள அஜித் மற்றும் அவரது அணி உறுப்பினர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் போட்டிக்குத் தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
அப்போது அஜித் அளித்த பேட்டி: நான் 2002, 2003, 2004 ஆண்டுகளில் கார் ரேஸில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் 2004 தொடரில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. 2010ல் யூரோப்பியன் பார்முலா ரேஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால், இடையில் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்லாமல் உரிமையாளராகவும் வந்துள்ளேன். நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.