படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தனுஷ் இயக்கம், நடிப்பில் தயாராகி வரும் படம் 'இட்லி கடை'. இப்படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இப்படத்திற்காக வெளிநாட்டில் இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். அதற்காக நித்யா மேனனிடம் தேதிகளைக் கேட்டால் அவர் தன்னிடம் தேதிகள் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்காக மார்ச் மாதம் வரை தன்னுடைய தேதிகளை ஏற்கெனவே கொடுத்துவிட்டதால் 'இட்லி கடை' படத்திற்கு மேலும் தேதிகளைத் தர வாய்ப்பில்லை என்றாராம். நித்யாவிடம் வாங்கிய தேதிகளில் தனுஷ் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தாமல் வேறு சிலரை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார். தன்னுடைய தேதிகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணாக்கியதாக நித்யா மேனன் சொல்லிவிட்டாராம்.
வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்ட நிலையில் நித்யா மேனன் தந்த இந்த சிக்கலால் படப்பிடிப்பை நடத்துவதில் பிரச்சனை வந்துள்ளது. நித்யாவிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்களாம். தனுஷிற்கு இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான் இந்த நிலை என்று சொல்லி புரிய வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். நித்யா சமாதானம் ஆவாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.