தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு காலத்தில் வாழ்ந்த கேரக்டர்களை இன்னொரு காலத்து கதையோடு இணைப்பது சினிமாவில் ஒரு ஸ்டைல். உதாரணத்திற்கு இக்காலத்தில் காந்தி மீண்டும் பிறந்து வந்து இன்றைய நாட்டு நடப்புகளை பற்றி பேசுவது மாதிரியான படம் பெரும்பாலான மொழிகளில் வந்துள்ளது. சிவபெருமான் இப்போது பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்கிற கதைதான் வி.கே.ராமசாமி நடித்த 'ருத்ர தாண்டவம்'. இப்படி நிறைய இருக்கிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக 1942ல் வெளிவந்த படம் 'தமிழறியும் பெருமாள்'.
வடநாட்டை சேர்ந்த கவிஞரான காளிதாசின் கதை இந்த படம். ஆனால் இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த நக்கீரரும், அவ்வையாரும் வருவார்கள். இவர்கள் மூவரும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் சந்தித்து உரையாடுவது, விவாதிப்பது மாதிரியான காட்சிகள் படத்தில் இடம்பெற்றது.
இது ஒரு புறம் பாராட்டப்பட்டாலும் இன்னொருபுறம் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த நாளில் புகழ்பெற்ற திரை எழுத்தாளர் இளங்கோவன் இதன் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார். நியூடோன் ஸ்டூடியோவில் ஆர்.எம். ராமநாதன் செட்டியாரால் தயாரான இந்தப் படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார்.
ராமச்சந்தர் என்ற பெயருடனேயே படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதன் கதாநாயகி எம்.ஆர். சந்தானலட்சுமி. இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்தார். மேலும் வி.ஏ.செல்லப்பா, ஆர்.பாலசுப்பிரமணியம், டி.எஸ். துரைராஜ், எம்.எஸ். தேவசேனா, எம்ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி முதலானோரும் இதில் நடித்தார்கள். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சரஸ்வதி ஸ்டோர் நிறுவனம் சார்பில் இந்தப் படத்திற்கான இசையமைப்பைச் செய்திருந்தார்கள். படத்தில் மொத்தம் 22 பாடல்கள். பாடல்கள் அனைத்தையும் உடுமலை நாராயணகவி எழுதினார் .