'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவிலும், ஆஸ்கர் விருது பெறும் அளவிலும் கொண்டு சென்றவர் இயக்குனர் ராஜமவுலி. அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள அலுமினிய பேக்டரியில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் கென்யா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்தப் படத்திற்காக கலைஞர்கள் அனைவரிடமும் 'வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம்' போடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 'Non-disclousure Agreement' சுருக்கமாக 'NDA' என்ற இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுபவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது என்பது அர்த்தம். அதாவது படத்தின் ரகசியம் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்படி அவர்கள் மூலம் ஏதாவது ரகசியம் வெளியே போனால், அதற்கு நஷ்டஈடாக பெரும் தொகை செலுத்த வேண்டி வரும். அதோடு படப்பிடிப்புத் தளத்தில் கண்டிப்பாக மொபைல் போன் எடுத்து வரக் கூடாது உள்ளிட்ட சில முக்கிய 'கண்டிஷன்கள்' போடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருட காலம் நடைபெற உள்ளதாம். அதற்குள் அக்காட்சிகளை வேறு யாரும் காப்பி அடித்துவிடக் கூடாது என்பதால்தான் இப்படியான ஒப்பந்தம் என்கிறார்கள்.