குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுக்கு 70க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி டிராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ட்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.
வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் கே.பாக்யராஜ் பி.வாசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கவுண்டமணி ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி என்பதால் அவரது பேச்சை கேட்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நல்ல கண்டெண்ட் கிடைக்கும் என்று மீடியாக்களும் காத்திருந்தனது.
கவுண்டமணி பேசியதாவது: ''அனைவரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள், மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா'வை நன்றாக பாருங்கள். இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா'வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். 'ஒத்த ஒட்டு முத்தையா'வை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா'வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட" என்றார்.