5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நுழைந்தவர் நடிகை சாய் பல்லவி. மலையாளம் மட்டுமல்லது தற்போது தென்னிந்திய அளவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக மாறிவிட்டார். நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான அமரன் படத்தில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து தண்டேல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய்பல்லவியை பொறுத்தவரை அவரது அதிரடி நடனத்திற்காக பிரபலமானவர். அப்படிப்பட்டவரிடம் நீங்கள் எந்த ஹீரோவுடன் இணைந்து போட்டி நடனம் ஆட வேண்டும் என்றால் எந்த ஹீரோவுடன் ஆடுவீர்கள் என கேட்டதற்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நடிகர் விஜய்யுடன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
இது குறித்து அவர் கூறும் போது, “யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதற்கோ அவர்கள் பாடல்களுக்கு ஆடுவதையோ நான் ரொம்பவே விரும்புவேன். எப்போதும் விஜய்யின் நடனத்தை நான் ரசித்து பார்ப்பேன். நாமெல்லாம் ஒரே குரூப் என்பது போல உணர முடிகிறது” என்று கூறியுள்ளார்.