மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போகும் கருப்பு படம்! | ‛டாக்ஸிக்' படத்தில் நாடியாவாக கியாரா அத்வானி! | நானிக்கு ஜோடியாகும் கயாடு லோகர்! | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்கள், டீசர்கள் | படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை | 2025 இந்தியாவின் முதல் நாள் ஓபனிங் : முதலிடத்தில் 'கூலி' | 'அகண்டா 2' தந்த அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா | 'டைம்' ரொம்ப முக்கியம்: சண்முக பாண்டியன் ‛பளீச்' | நவரத்தினம், வாலி, லவ்வர் - ஞாயிறு திரைப்படங்கள் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து திரைக்கு வந்துள்ள படம் 'விடாமுயற்சி'. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி உள்ள இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு அஜித்தின் நடிப்பு பாராட்டுகளை பெற்றாலும் படத்தின் இரண்டாவது பாதி சலிப்பு தட்டுவதாகவே அமைந்துள்ளது. தமிழகத்தில் அஜித்துக்கு பெரிய அளவில் ரசிகர் வட்டம் இருப்பதால் முதல் நாளில் 30 கோடி வசூலித்திருப்பதாகவும், உலக அளவில் 55 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் தெலுங்கில் 'பட்டுடாலா' என்ற பெயரில் வெளியான இப்படம் மிக மோசமான வசூலை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தெலுங்கில் பட்டுடாலா படத்திற்கு பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படவில்லையாம். இந்த படத்திற்கு தெலுங்கு ஊடகங்களும் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்துள்ளன.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7ம் தேதி) நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகியிருப்பதால் அஜித்தின் 'பட்டுடாலா' படத்தின் வசூல் இன்னும் பெரிய அளவில் பாதிக்கும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. என்றாலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தை தெலுங்கு சினிமாவின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதால் அந்த படத்திற்கு இப்போதே தெலுங்கில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.




